ஞாயிறு, 16 மே, 2021

ஓவர் நைட்ல Realme பார்த்த வேலை; இந்தியாவின் Cheapest 5G Phone அறிமுகம்!

 ரெட்மி நோட் 10எஸ் அறிமுகமான நிமிடத்திலிருந்து அதை ஈடுகட்ட, ஓரங்கட்ட… முதலில் ரியல்மி 8 5ஜி மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது, இப்போது அதன் புதிய 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


    New Storage Variant of Realme 8 5G


ஹைலைட்ஸ்:
  • ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிமுகம்
  • மே 18 முதல் வாங்க கிடைக்கும்
  • இனிமேல் இது தான் இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி போன்

ரியல்மி இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தனது தற்போதைய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் மலிவான பதிப்பை அறிமுகப்படுத்தியது. அது ரியல்மி 8 5ஜியின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பாகும்.

இது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைவிட ரூ.1,000 மலிவானது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 8 5 ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,999 ஆகும்.


இந்த ஸ்டோரேஜ் மாடலுக்கான முதல் விற்பனை மே 18 ஆம் தேதி ரியல்மி வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் நடக்கும்.

சலுகைகளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் மொபிக்விக் பேமண்ட்ஸ்களில் (ரூ.200 வரை) 10 சதவீத கேஷ்பேக் மற்றும் ஃப்ரீசார்ஜ் பேமண்ட்ஸ்களுடன் ரூ.75 கேஷ்பேக் போன்றவைகளை அறிவித்துள்ளது.

இப்போது வரை, ரியல்மி 8 5 ஜி இரண்டு பதிப்புகளில் 4 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் ரியல்மி வலைத்தளத்திலும், பிளிப்கார்ட் இ-காமர்ஸ் வலைத்தளத்திலும் விற்கப்படுகின்றன.

Realme 8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- ரியல்மி யுஐ 2.0

- 6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 20: 9 திரை விகிதம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன்ட்ரெயில் கிளாஸ் பாதுகாப்பு

- மீடியா டெக் டைமன்சிட்டி 700 SoC
- ARM மாலி-ஜி 57 எம்சி 2 ஜி.பீ.யூ
- 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
- விர்ச்சுவல் ரேம்களாக மாற்றுவதற்கான டி.ஆர்.இ தொழில்நுட்பம்

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்)
- 2 மெகாபிக்சல் (மோனோக்ரோம், எஃப் / 2.4) போர்ட்ரெய்ட் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4) மேக்ரோ லென்ஸ்
- நைட்ஸ்கேப், 48 எம் மோட், ப்ரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற கேமரா அம்சங்கள்

- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (எஃப் / 2.1 லென்ஸ்)
- போர்ட்ரெய்ட், நைட்ஸ்கேப் மற்றும் டைம்லேப்ஸ் போன்ற செல்பீ கேமரா அம்சங்கள்

- 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
- பிரத்யேக ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1 டிபி வரை) விரிவாக்கலாம்
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் - Accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity சென்சார்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

- 18W க்விக் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- அளவீட்டில் 162.5x74.8x8.5 மிமீ
- எடையில் 185 கிராம்.